ம.சீ.சாவை இழக்க பாரிசான் விரும்பாது! – அம்னோ உறுதி!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
பாரிசானில் ம.சீ.சாவின் உறவு வலுவாகவே இருக்கிறது என அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான Datuk Seri Johari Abdul Ghani இன்று தெரிவித்தார். ம.சீ.சாவின் பலத்தை அம்னோ நன்கு அறிந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரிசானின் அசைக்க முடியாத சக்தியாக ம.சீ.ச இன்றும் நிலைத்திருக்கிறது என Datuk Seri Johari Abdul Ghani உறுதியளித்தார். நேற்று நடைபெற்ற ம.சீ.சவின் தேசிய மாநாட்டில் ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong டி.ஏ.பியின் மீது அதிகமான விமர்சனத்தை முன்வைத்தார் என்றாலும் அவரின் குற்றச்சாட்டுகளும் விமர்சனமும் நியாயமாக இருக்குமே என்றால் பாரிசான் Datuk Seri Dr Wee Ka Siongகின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் என Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார்.
ம.சீ.ச போன்ற வலுவான கட்சி மற்ற அரசியல் கட்சிகளின் அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என பாரிசான் வலியுறுத்தவில்லை என்றாலும் மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சியாக ம.சீ.ச இருக்கிறது என அம்னோ நன்கு அறிந்திருப்பதாகவும் Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். ம.சீ.ச முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாரிசான் நிராகரிக்காது என்றும் ம.சீ.சவின் அரசியல் உணர்வுக்குப் பாரிசான் மதிப்பளிப்பதாகவும் Datuk Seri Johari Abdul Ghani நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



