மக்களின் குரலை உயர்த்த ஊடகம்–சமூக அமைப்பு கூட்டணி வலுவடைய வேண்டும்: டத்தோ ஸ்ரீ வொங் சூன் வை
- Tamil Malar (Reporter)
- 06 Dec, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
பினாங்கு, டிச. 6-
மக்களின் குரல் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் ஒலிக்க, ஊடகங்கள், சமூக அமைப்புகள் (என்ஜிஓ) இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என டத்தோ ஸ்ரீ வொங் சூன் வை வலியுறுத்தினார்.
தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமாவின் தலைவருமான அவர், சமூக அமைப்புகள் மக்கள் வாழ்வின் அடித்தளத்தை நன்கு அறிந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதால், அவை ஊடகங்களுக்குப் பிரதான தகவல் வளமாக இருப்பதாக கூறினார்.
“சிறப்பான ஜனநாயகத்தில் ஊடகமும் சமூக அமைப்புகளும் இரு முக்கிய தூண்கள். ஒன்றின் வலிமை மற்றொன்றை உறுதிப்படுத்தும். துல்லியமான தகவல்கள், தெளிவான பகுப்பாய்வுகள், பொது நல விவாதங்களை உருவாக்க நாம் ஒருவரை ஒருவர் நம்பிக்கையுடன் சார்ந்திருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



