மலாக்கா ஆட்சியில் பாஸ் கட்சி!
- THINAGAREN SANGGAREN
- 06 Nov, 2026
நவம்பர் 6,
மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்படும் மாநில அரசாங்கத்தில் பாஸ் கட்சி இடம் பெறும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் TUAN IBRAHIM TUAN MAN தெரிவித்தார். 28 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் 23 சட்டமன்றங்களிலும் பெரிக்காத்தான் 5 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகின்றது. பாரிசானும் பெரிக்காத்தானும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் கூட்டணி ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகவும் TUAN IBRAHIM TUAN MAN தெரிவித்தார்.
ஆட்சியில் பங்குபெறுவதால் பெரிக்காத்தானுக்கு மேலும் பலம் அதிகரிக்கும். கிளாந்தான், திரங்கானு, கெடா, பெர்லீஸ் ஆகிய 4 மாநிலங்களில் பெரிக்காத்தான் தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. தற்போது மலாக்காவிலும் ஆட்சியில் பங்கு வகிக்க பெரிக்காத்தான் போட்டியிடும் 5 சட்டமன்றங்களிலும் வெற்றி பெற வேண்டும் என TUAN IBRAHIM TUAN MAN வலியுறுத்தினார். பாரிசான் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றாலும் பெரிக்காத்தானுக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும் என TUAN IBRAHIM TUAN MAN நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

