வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கும் அமைச்சர்! அமைச்சரவைப் பிரச்சனையை விடவும் இது முக்கியம்! - Datuk Seri Tiong King Sing

top-news

ஜனவரி 31,


சரவாக் BINTULU பகுதியில் வெள்ள நிலைமை மோசமடைந்து வரும்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Datuk Seri Tiong King Sing களத்தில் இறங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகுகளில் அவர் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் அவரைப் பேட்டி எடுக்க வந்த செய்தியாளார்களை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற நான் வந்துள்ளேன். என்னைப் பேட்டி எடுப்பதை விட்டுவிட்டு மக்களைக் காப்பாற்றுங்கள் என வலியுறுத்தினார்.

சுற்றுலா கலை கலாச்சார அமைச்சின் நிகழ்ச்சிகளுக்குச் செலவிடப்பட்ட நிதியில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக Masjid Tanah நாடாளுமன்ற Mas Ermieyati கேள்விக்கு நான் பதிலளிக்க நேரம் உள்ளது. என் அமைச்சரவை வேலைகளை விடவும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் பணி அவசியமாகத் தாம் கருதுவதாகவும் இப்போது நான் வெள்ள நிவாரணப் பணிகளில் உள்ளேன். மக்களைப் பாதுகாப்பாக மீட்ட பின்னர் அமைச்சரவைக்குத் திரும்பியதும் இது குறித்து பேசலாம் என Datuk Seri Tiong King Sing தெரிவித்தார்.

Menteri Pelancongan, Seni dan Budaya, Datuk Seri Tiong King Sing turun padang membantu mangsa banjir di Bintulu, Sarawak. Beliau menegaskan bahawa menyelamatkan rakyat lebih penting berbanding isu kabinet dan akan menjawab pertanyaan berkaitan selepas operasi bantuan selesai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *