பட்டாசுக் கடையில் தீ! வீடும், கடையுடன், மோட்டார் சைக்கிளும் கருகியது!
- THINAGAREN SANGGAREN
- 23 Mar, 2026
மார்ச் 23,
பினாங்கு நிப்போங் தெபாலில் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்து வந்த சாலையோரக் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 4 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒரு வீடு உட்பட 3 கடைகள் சேதமானதைத் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் முழுமையாகத் தீயில் கருகியது. சாலையோரக் கடையில் பட்டாசுகள் வெடித்து சிதறும்படியும் பொதுமக்கள் அலறி ஓடும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் தொடர்பாகப் பினாங்கு தீயணைப்பு மீட்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பினாங்கு நிப்போங் தெபாலில் உள்ள Taman Pekaka சாலையில் நள்ளிரவு 12.05 மணிக்கு இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் சுமார் 100 சதுர அடி பரப்பளவுக் கொண்ட கூடாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள், உணவகத்தில் இருந்தவர்கள் என சுமார் 4 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis விளக்கமளித்தார்.
அதிகாலை சுமார் 1.25 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பட்டாசுக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



