பெல்ஜியத்துடன் எகிப்து சமநிலை
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
சியாட்டில், ஜூன் 16 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை நிரப்புவதற்காக எகிப்து வரவில்லை என்றும், தனது அணி உலகத் தரத்திலான திறமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தலைமைப் பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் தெரிவித்துள்ளார்.
‘குரூப் ஜி’ பிரிவு ஆட்டத்தில் வலுவான பெல்ஜிய அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றி தங்கள் கைவசம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் எமாம் அஷூர் அடித்த அற்புதமான கோல் மூலம் எகிப்து முன்னிலை பெற்றது. அதன் பின்னர் பெல்ஜியத்தின் தாக்குதல்களைத் திறம்பட சமாளித்து கடுமையான சவாலை அளித்தது.
எனினும், 66-ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய சில விநாடிகளிலேயே ரொமேலு லுகாகு ஏற்படுத்திய அழுத்தத்தால் முகமது ஹானி தவறுதலாக சுய கோல் அடித்ததால் பெல்ஜியம் சமநிலையை எட்டியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



