விளையாட்டுத் துறைக்கான இளவரசி அஸ்தூரியாஸ் விருதை வென்றார் மெஸ்சி
- Surendran Sumdraraj
- 04 Jun, 2026
மாட்ரிட், ஜூன் 4 –
உலக கால்பந்து நட்சத்திரமான Lionel Messi, 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் உயரிய இளவரசி அஸ்தூரியாஸ் (Princess of Asturias) விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயினின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது, அவரது அபாரமான விளையாட்டு சாதனைகள் மற்றும் சமூக நலப் பணிகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
38 வயதான மெஸ்சி, தனது கால்பந்து வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். அண்மையில், 2026 உலகக் கோப்பை போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் அவர் இடம்பெற்றுள்ள நிலையில், இது அவரது ஆறாவது உலகக் கோப்பை பங்கேற்பாக அமையவுள்ளது.
விளையாட்டுத் திறமை மட்டுமின்றி, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற முடியாத குழந்தைகளுக்காக அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளும் விருதுக்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. அவரது அறக்கட்டளை மூலம் உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த விருதை கடந்த ஆண்டு அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் Serena Williams பெற்றிருந்தார். தற்போது அந்த வரிசையில் மெஸ்சியும் இணைந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



