இன்னும் மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி! நஜிப் உருக்கம்
- Shan Siva
- 23 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 23: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மகளான நூர்யானா
நஜ்வா நஜிப், தனது
தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு மனமுருகும் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து,
அவர் மேற்கொள்ளவுள்ள இதய சிகிச்சை
வெற்றிகரமாக அமைய வேண்டுமென பிரார்த்தனை செய்துள்ளார்.
இன்று தனது முகநூல்
பதிவில், பல சவால்களை
எதிர்கொண்டிருந்தாலும் நஜிப்பின் மன உறுதி, தாராள மனப்பான்மை மற்றும் அசைக்க
முடியாத நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“பிறந்தநாள்
வாழ்த்துகள் டாடி/போஸ்கூ” என்று பதிவிட்டுள்ளார்..
இதய சிகிச்சைக்காக
நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், உங்கள் மன உறுதி நேர்மறையாகவே உள்ளது.
உங்கள் இதயம் தாராளமானது; உங்கள்
நம்பிக்கை அசைக்க முடியாதது.
நான் எப்போதும்
உங்கள் மிகப்பெரிய ஆதரவாளராக இருப்பேன். ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றாக இருப்போம்
என்ற நம்பிக்கையை கைவிடாமல், ஒருவருக்கொருவர்
உற்சாகம் அளித்துக்கொண்டே இருக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், நஜிப்பின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் மன வலிமைக்காக
பிரார்த்தனை செய்த அவர், “பிறந்தநாள்
வாழ்த்துகள் டாடி. நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த
நஜிப், தனது முகநூல் பதிவில்
பிறந்தநாள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி
தெரிவித்துள்ளார்.
எனக்காக பிரார்த்தனை
செய்ததற்கும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததற்கும் நன்றி.
இன்னும் என்னை
நினைவில் வைத்திருக்கும் மக்கள் இருப்பது என்னை மிகவும் நெகிழச் செய்கிறது.
நாம் எப்போதும் இறைவனின்
பாதுகாப்பில்; அனைத்து
நல்ல பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும்; வாழ்வாதாரம் வளமாகட்டும்; நல்ல உடல்நலத்துடன் வாழ
ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று
அவர் கூறியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



