நாங்கள் சொன்னதைச் செய்வோம்! ம.இ.கா உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 28 Jun, 2026
ஜூன் 28,
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வழங்காமல் நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாரிசான் வழங்கி வருகிறது என BUKIT BATU சட்டமன்ற ம.இ.கா வேட்பாளர் R K Kumaran தெரிவித்தார். ம.இ.கா சொன்னதைச் செய்வோம், செய்ய முடியாததைச் சொல்ல மாட்டோம் என R K Kumaran தெரிவித்தார். கடந்த 2022 ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் வேட்பாளர் S.SUPPAYAH பக்காத்தான் வேட்பாளர் ARTHUR CHIONG SEN SERN-இடம் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். BUKIT BATU சட்டமன்றத்தை மீண்டும் ம.இ.கா கைப்பற்றும் என ம.இ.கா வேட்பாளர் R K Kumaran தெரிவித்தார்.
BUKIT BATU சட்டமன்றத்தில் பக்காத்தான் வேட்பாளராக ARTHUR CHIONG SEN SERN, மூடா கட்சியின் வேட்பாளராக M Premanand, பெர்சாமா கட்சியின் வேட்பாளராகத் தமிழி கோபாலக்கிருஷ்ணன், சுயேட்சை வேட்பாளராக Datuk Kamaruzaman Ali, ம.இ.கா வேட்பாளராக R K Kumaran என 5 முனை போட்டி நிலவுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



