ம.இ.காவில் ஒதுக்கப்படும் பெண்கள்! அதிருப்தியில் ம.இ.கா மகளிர்!

top-news
FREE WEBSITE AD

ஜுன் 25,

ம.இ.காவின் தொடர் படுதோல்விகளுக்கு பின்னர் கடந்த காலத் தவறுகளை ம.இ.கா மீண்டும் செய்யாது என நினைத்த சிலர், JOHOR தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தாமல் , ம.இ.கா நிராகரித்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணியில் ம.இ.கா 4 சட்டமன்றங்களில் போட்டியிடுகிறது. ம.இ.கா போட்டியிடும் 4 சட்டமன்ற வேட்பாளர்களில் பெண்கள் இல்லாதது ம.இ.காவின் மகளிர் பிரிவுக்கு வருத்தம் அளிப்பதாகவும் இதனால் ம.இ.காவின் PUTERI தரப்பினர் உட்பட அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

பாரிசான் வேட்பாளர் அறிமுகத்தின் போது ம.இ.கா கோரிக்கையைப் பாரிசான் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், ம.இ.கா வழங்கிய வேட்பாளர்கள் பட்டியலில் பாரிசான் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் ஏற்றுக்கொண்டதாகவும் பாரிசான் தலைவர் DATUK SERI AHMAD ZAHID HAMIDI தெரிவித்திருந்தார். அப்படியானால் ம.இ.கா வழங்கிய வேட்பாளர் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் இல்லையா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. 

கடந்த 2022 JOHOR மாநில சட்டமன்றத் தேர்தலில் KEMELAH சட்டமன்றத்தில் பாரிசான் வேட்பாளராக ம.இ.காவின் மகளிர் தலைவியான SARASWATHY NALLATHANBY போட்டியிட்டு, PAKATAN, PERIKATAN வேட்பாளர்களைத் தோற்கடித்து 7,518 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், கடந்த தேர்தலில் TENGGAROH சட்டமன்றத்தில் போட்டியிட்ட   ம.இ.காவின் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவரான RAVEN KUMAR KRISHNASAMY இப்போது KEMELAH சட்டமன்றத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *