T.MOHAN தோல்வியை ஏற்று இணைந்து செயல்பட வேண்டும்! - Datuk Asojan வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 11 Jul, 2024
ம.இ.கா தேர்தல் முறையாக நடைபெற்று முடிந்து விட்டது இது குறித்து சர்ச்சைகளைக் கிளப்பாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவருக்கும் நல்லது என ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர் அசோஜன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ம.இ.கா உறுப்பினர்கள் வாக்களித்து நாங்கள்
தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம், T.MOHAN உதவித்தலைவர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
என்றும் கட்சி யாரையும் விலக்க எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தல் குறித்து சர்ச்சை எழுப்புவதை விடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும்
மாநில மாநாடுகளில் கவனம் செலுத்தும்படியும் ம.இ.கா தொகுதித் தலைவர்களை உதவித் தலைவர்களான
டத்தோ நெல்சன், டத்தோ முருகையா, ஆகியோருடன் தாமும் சந்திக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



