மெக்காவை நோக்கி ஏவுகணை, டிரோன் தாக்குதல் – வழியிலேயே சுட்டு வீழ்த்திய சவுதி படைகள்
- Surendran Sumdraraj
- 16 Sep, 2026
மெக்கா: சவுதி அரேபியாவின் மெக்கா நகரை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்காக அனுப்பப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை சவுதி பாதுகாப்புப் படையினர் வழியிலேயே சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், மெக்கா, ஜெட்டா மற்றும் தைப் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மெக்காவின் தெற்குப் பகுதியை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு சவுதி அரசு அறிவுறுத்தியது. பின்னர் தாக்குதல்கள் தடுக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



