முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மு.க.ஸ்டாலின்: கவர்னர் ஏற்பு

top-news
FREE WEBSITE AD


தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியான திமுக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அரசியல் சூழ்நிலையையடுத்து, மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராகத் தொடர்ந்து செயல்படுமாறு மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *