மு.க.ஸ்டாலினுக்குத் திடீர் உடல்நலக்குறைவு – திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
- Surendran Sumdraraj
- 15 Sep, 2026
சென்னை, செப். 15 –
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற இருந்தது.
ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



