பாஸ் பற்றி கவலை இல்லை; சட்டமன்றத்தைக் கலைத்துவிடுவேன்! - பெர்லிஸ் மந்திரிபெசார் அதிரடி
- Shan Siva
- 24 May, 2026
கோலாலம்பூர், மே 24: வரவிருக்கும் ஜூன் 3-5 தேதிகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆறு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், மாநில சட்டமன்றத்தைக் கலைத்துவிடுவேன் என்று பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா கூறியுள்ளார்.
தன்னை மந்திரி பெசாராக நியமித்தபோது, அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை பெர்லிஸ் ராஜா தன்னிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், நான் சட்டமன்றத்தைக் கலைத்துவிடுவேன். இதில் என்ன பிரச்சனை? ஒரு அரசியல்வாதியாக, நான் ஒருபோதும் அச்சத்தை அறிந்ததில்லை என்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 'மலாம் சித்ரா வர்ணா கோலா பெர்லிஸ் 2026' நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



