DAP உடன் அம்னோ - எந்த மலாய்காரரும் ஏற்றுக்கொள்ளவில்லை! - பாஸ்
- Shan Siva
- 17 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 17: மலாய் சமூகத்தை ஒன்றிணைக்கும் அம்னோவின் முயற்சிகள், டிஏபியுடன் ஒத்துழைப்பதை நிறுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று பாஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சயாஹிர் சே சுலைமான் தெரிவித்துள்ளார்.
மலாய் மற்றும் முஸ்லிம் ஒற்றுமைக்கான திட்டமிடலை வெற்றிகரமாக்க, டிஏபி உடனான உறவுகளைத் துண்டிப்பதன் மூலம் அம்னோ முதல் படியை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி அல்லது தனிப்பட்ட நலன்களை விட இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையில் முஸ்லிம் ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு பாஸ் எப்போதும் திறந்தே உள்ளது என்று அவர் கூறினார்.
மலாய் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் அம்னோ தைரியத்துடனும் கண்ணியத்துடனும் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். முதல் படி டிஏபியை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவுடன் இணைந்து டிஏபி முன்னெடுக்கும் நிகழ்ச்சி நிரலை எந்த மலாய்க்காரரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பாச்சோக் எம்.பி.யான சியாஹிர் கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நேற்று மலாய்காரர்களுக்கான "பெரிய கூடாரம்" என்ற கருத்தை நிராகரித்து, மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க அம்னோ திறந்த நிலையில் இருப்பதாகக் கூறினார். அம்னோ இதில் ஈடுபடாததால் "பெரிய கூடாரம்" செயல்படத் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
அம்னோ ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, சமூகத்தை ஒன்றிணைத்து, அரசியல் இயல்புடைய சவால்கள் உட்பட தற்போதைய சவால்களை எதிர்கொள்ள உதவும் ஒரு தளமாக செயல்பட்ட "மலாய் வீடு" என்றும் ஜாஹிட் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



