ஜெம் வீரமணி மீது புகார் அளிக்க செல்போன் எண் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் நேரடியாக புகார் அளிக்க 93453 19676 என்ற செல்போன் எண்ணை அறிவித்துள்ளது. தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் வழியாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்கக் கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன், இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *