‘Drishyam 3’ புதிய போஸ்டரை வெளியிட்ட Mohanlal

top-news
FREE WEBSITE AD

மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் ஒன்றான “Drishyam” தொடரின் மூன்றாவது பாகமான “Drishyam 3” படத்தின் புதிய போஸ்டரை நடிகர் Mohanlal தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தில் Mohanlal மீண்டும் தீவிரமான தோற்றத்தில் காணப்படுகிறார். “The Past Never Stays Silent” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“Drishyam” மற்றும் “Drishyam 2” ஆகிய இரு படங்களும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. குறிப்பாக குடும்பம், குற்றம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதை சொல்லும் முறை இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த மூன்றாவது பாகத்தையும் இயக்குநர் Jeethu Joseph இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய பாகங்களில் நடித்த முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *