BUDI95 திட்டத்தின் கீழ் மாதாந்திர ஒதுக்கீடு 200 லிட்டராகவே நீடிக்கிறது - நிதி அமைச்சு
- Surendran Sumdraraj
- 01 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 1:
நேற்று இரவு 11 மணிக்கு கணினி அமைப்பின் பராமரிப்பின் போது காட்டப்பட்டதைப் போல 150 லிட்டராக இல்லாமல், BUDI95 திட்டத்தின் கீழ் மாதாந்திர ஒதுக்கீடு 200 லிட்டராகவே நீடிக்கிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில பயனர்கள் மாதாந்திர ஒதுக்கீடு 150 லிட்டராகக் காட்டப்பட்டதைப் பார்த்திருக்கலாம் என்று அமைச்சு கூறியது.
இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், தொழில்நுட்பக் கணினிப் பிழையின் காரணமாகவே அவ்வாறு காட்டப்பட்டதாகவும், அது கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் நிதியமச்சு கூறியது.
தகுதியுள்ள பயனர்களுக்கு, ஜூன் மாதம் உட்பட, BUDI95 திட்டத்தின் மாதாந்திர ஒதுக்கீடு மாதத்திற்கு 200 லிட்டராகவே நீடிக்கிறது என்பதை அமைச்சகம் வலியுறுத்த விரும்புகிறது என்று நிதியமைச்சு தெரிவித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



