சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரம்; 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

top-news
FREE WEBSITE AD

கார்ட்டூம், ஜூன் 16 –

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் டிரோன் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, டிரோன் போர் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக தீவிரமடைந்து வருவதுடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு தொடங்கிய சூடான் உள்நாட்டுப் போர் தற்போது நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், டிரோன்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *