வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

top-news

ஏப்ரல் 11,

மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 36 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றிரவு 9.45 மணிக்கு Ketapang சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Haji Othman தெரிவித்தார். கெத்தாப்பாங்கிலிருந்து Bukit Easter செல்லும் சாலையில் அருகில் மோட்டார் சைக்கிள் வருவதைப் பார்க்காமல் வாகனம் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

விபத்தில் பலியானவர் 36 வயது உள்ளூர் ஆடவர் என்றும் விபத்துக்குக் காரணமான வாகனமோட்டி 38 வயது உள்ளூர் பெண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Haji Othman தெரிவித்தார். விபத்தில் 38 வயது உள்ளூர் பெண்ணுக்குச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Haji Othman தெரிவித்தார்.

Seorang penunggang motosikal tempatan berusia 36 tahun maut selepas melanggar sebuah kenderaan yang cuba melintasi jalan di Ketapang. Kemalangan berlaku jam 9.45 malam dan pemandu wanita berusia 38 tahun mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *