மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு: 3-ஆவது அணி முயற்சியா?
- Surendran Sumdraraj
- 18 Sep, 2026
கொல்கத்தா: தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது தேசிய அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் விலகியதாகவும், இதனால் தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியதாகவும் தினத்தந்தி செய்தி தெரிவித்துள்ளது.
இதனிடையே, அண்மையில் மும்பையில் உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்தார். பின்னர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலேவையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதேவேளை, இந்த சந்திப்புகள் மூன்றாவது அணியை அமைப்பதற்கான நடவடிக்கையா அல்லது தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களில் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாட்டை அறியும் முயற்சியா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



