வீட்டிலிருந்து வேலை பார்த்தாலும் பணியாளரின் பாதுகாப்பு & நலன் முக்கியம்! - மனிதவள அமைச்சர் ரமணன்
- Shan Siva
- 10 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 10: வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை (Flexible Work Arrangements – FWA) நடைமுறைப்படுத்தும் முதலாளிகள், இனி பணியாளர்களின் உடல் பாதுகாப்பு மட்டுமின்றி மனநலம் மற்றும் உளவியல்-சமூக (psychosocial) அபாயங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டியது கட்டாயம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இந்த நிபந்தனை, தொழில்துறை பாதுகாப்பு மற்றும்
சுகாதாரத் துறை (DOSH) உருவாக்கிய “நெகிழ்வான வேலை ஏற்பாடுகளுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும்
சுகாதார வழிகாட்டி 2026” ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,
பல துறைகளில் நெகிழ்வான வேலை முறை விரிவடைந்து வரும் சூழலில்
இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வேலை எங்கு நடைபெற்றாலும் — வீட்டிலிருந்து கூட —
பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் உறுதிப்படுத்துவது
முதலாளிகளின் பொறுப்பாகும் என்பதை இந்த வழிகாட்டி வலியுறுத்துகிறது என இன்று
நாடாளுமன்றத்தின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவுரையின் போது
அவர் தெரிவித்தார்.
இந்த வழிகாட்டியின் கீழ், வேலைநிலைய
பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாய மதிப்பீடுகள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,
இதில் உடல் அமைப்பு சார்ந்த (ergonomic) அபாயங்களுடன்
சேர்த்து, வேலை சார்ந்த மனஅழுத்தம், மனச் சோர்வு போன்ற உளவியல்-சமூக அபாயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும்
ரமணன் கூறினார்.
1955 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு சட்டத்தில்
செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் 2023 ஜனவரியில்
அமலுக்கு வந்த நெகிழ்வான வேலை ஏற்பாடுகள், வேலை-வாழ்க்கை
சமநிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டவை என்றாலும், அது பணியாளர்களின் நலனுக்கு பாதகமாக அமையக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது கட்டமாகப் பிரிக்கப்பட்ட
வேலை நேரம் போன்ற நெகிழ்வான ஏற்பாடுகள், துறையின்
பொருத்தம், பணியின் தன்மை மற்றும் முதலாளி-பணியாளர்
இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்ற அவர், தவறான பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் தெளிவான வழிகாட்டுதல்கள்
அவசியம் என்றும், அது பணியாளர்களின் மனநலத்தை பாதுகாக்க
உதவும் என்றும் கூறினார்.
மேலும், தொழிலாளர் துறையின் மூலம் நடத்தப்படும்
தொழிலாளர் கல்வி நிகழ்ச்சிகள் வழியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2025 டிசம்பர் வரை நாடு முழுவதும் 222 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில்
நெகிழ்வான வேலை ஏற்பாடுகள் குறித்த விளக்கங்களும் இடம்பெற்றதாகவும் அவர்
தெரிவித்தார்.
டேலன்ட் கார்ப் (TalentCorp)
அமைப்பின் FWA@Workplace
முயற்சி, கருவிப்பெட்டிகள், பயிலரங்குகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் நிறுவனங்களுக்கு
நெகிழ்வான வேலை முறையை திட்டமிட்ட வகையில் செயல்படுத்த உதவியதாகவும், 2025
ஆம் ஆண்டில் சுமார் 4,74,400 பணியாளர்கள் இதனால் பயனடைந்ததாகவும் ரமணன் கூறினார்.
வேலை எங்கு நடைபெறுகிறதென்பதைப் பொருட்படுத்தாமல், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகளுக்கான சட்டப்பூர்வ பொறுப்பு முதலாளிகளிடமே தொடரும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Brucemex
https://website.informer.com/roscaralicante.pl
Donaldjed
https://ipn.md/ru/tehnicheskaya-ataka-i-diskreditacziya-it-kompanii-iz-moldovy-vytesnena-s-evropejskogo-rynka/
Glennovecy
https://carfydenpasar.com/
OscarDug
канадский номер телефона для регистрации
Michaelron
I congratulate, it seems remarkable idea to me is _ _ _ _ _ _ _ _ car rental iceland
Georgeswerb
I congratulate, the excellent message _ _ _ _ _ _ _ _ dubrovnik to split car rental
Adolforeilt
How will order to understand? _ _ _ _ _ _ _ _ https://yepcarsplit.com/
UlyssesFlork
I congratulate, a brilliant idea and it is duly _ _ _ _ _ _ _ _ https://instapaper.com/read/1991810953
Charlesthava
baku car rental
RandyLit
car rental athens airport