Syed Saddiq மீது மீண்டும் நீதிமன்ற விசாரணை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 8,

முவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சியின் தோற்றுநருமான Syed Saddiq-க்கு எதிராக அரசு தரப்பு செய்திருக்கும் மேல்முறையீட்டைக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும்  வரும் வியாழன் தொடங்கி 2 நாள்களுக்கு Syed Saddiq விசாரிக்கப்படுவார் என்றும் இன்று கூட்டர்சு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 25 பணமோசடி ஊழல் வழக்கிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசு தரப்பு 25 மேல்முறையீட்டுக் காரணங்களுடன் செப்டம்பர் 22 கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்த 2023 செப்டம்பர் 9 உயர்நீதிமன்றம் Syed Saddiq-க்குச் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் 2 சவுக்கடியும் 10மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் Syed Saddiq செய்த மேல்முறையீட்டில் Syed Saddiq குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டதை அடுத்து அரசு தரப்பு மீண்டும் கூட்டரசு நீதிமன்றத்தில் Syed Saddiqக்கு எதிராக 25 காரணங்களைக் கொண்ட மேல்முறையீட்டைச் செய்திருப்பதுடன், கடந்த 2023 செப்டம்பர் 9 உயர்நீதிமன்றம் Syed Saddiq-க்கு வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்தும்படியும் கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 11 டிசம்பர் முதல் அடுத்த 2 நாள்களுக்கு விசாரிக்க கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *