முகைதீன் சொத்து மதிப்பு RM10 மில்லியன் முதல் RM 15 மில்லியன்! RM 1.4 மில்லியன் அபராதம் பெரிய தொகை இல்லை! – LIM GUAN ENG

- Sangeetha K Loganathan
- 13 Dec, 2024
டிசம்பர் 13,
முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தானின் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தேர்தல் பிரச்சாரத்தில் DAP தலைவர் Lim Guan Eng மீது அவதூறு பரப்பியதால் நீதிமன்றம் RM 1.4 மில்லியன் அபராதம் விதித்து தீர்ப்பளித்த நிலையில் தொகை அதிகமாக இருப்பதால் அதனைக் குறைக்கும்படி Tan Sri Muhyiddin Yassin மேல்முறையீடு செய்துள்ளதை DAP தலைவர் Lim Guan Eng மறுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் தன்னைக் கீழ்த்தரமாக விமர்சித்தது மட்டுமின்றி தேசத் துரோகி எனும் வகையில் மேடைகளில் பிரச்சாரம் செய்தவர் முகைதீன் என்பதால் தமது பொது வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் முகைதீனுக்கு நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் அவருக்குப் பெரிய தொகை இல்லை, முகைதீனின் சொத்து மதிப்பு RM10 மில்லியன் முதல் RM 15 மில்லியன் என பொதுத்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாத வருமானம் RM93,841.65 என வெளியிட்டுள்ளார். அதனால் நீதிமன்றம் RM 1.4 மில்லியன் அபராதம் விதித்தது பெரிய தொகையாக இல்லை என தெரிவித்து, DAP தலைவர் Lim Guan Eng, முகைதீன் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை நிராகரித்தார்.
முன்னாள் பிரதமரும், நாட்டின் முன்னணி அரசியல்வாதியுமான முகைதீன், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, மக்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என Lim Guan Eng வலியுறுத்தினார்.
Lim Guan Eng menolak rayuan Tan Sri Muhyiddin Yassin untuk mengurangkan denda RM1.4 juta yang dikenakan mahkamah atas fitnah semasa kempen pilihan raya. Beliau menyatakan jumlah itu kecil berbanding anggaran aset Muhyiddin bernilai RM10-15 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *