முகைதீன் பிரதமர் வேட்பாளர் கிடையாது! பெரிக்காத்தான் தலைமை முடிவு!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 11,

முன்னாள் பிரதமர்  Tan Sri Muhyiddin Yassin பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் கிடையாது என பெரிக்காத்தான் கூட்டணி தலைவரும் திரங்கானு மெந்திரி பெசாருமான Dato’ Seri Ahmad Samsuri Mokhtar உறுதிப்படுத்தினார். தற்போது பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளிடையே சமரசமானப் போக்கையே தாம் ஏற்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் வேட்பாளர் குறித்து சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டிய நேரம் இப்போது இல்லை என்றும் Dato’ Seri Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார். 

அதே வேளையில் பெர்சத்து கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான Tan Sri Muhyiddin Yassin பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்கிற முடிவு இதுவரையும் எடுக்கப்படவில்லை. நான் பெரிக்காத்தான் தலைவராக இருப்பதால் பிரதமர் வேட்பாளராகிவிட முடியாது என Dato’ Seri Ahmad Samsuri Mokhtar விளக்கம் அளித்தார். தேர்தலின் போது பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளிடையில் முறையாக கலந்தாலோசிக்கப்பட்டு பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என Dato’ Seri Ahmad Samsuri Mokhtar உறுதியளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *