துரோகிகளைப் பெரிக்காத்தானின் இணைக்க கூடாது! முகைதீன் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 24,

பெரிக்காத்தானில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவரின் WAWASAN கட்சி துரோகிகளின் கட்சி என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தானின் முன்னாள் தலைவருமான TAN SRI MUHYIDDIN YASSIN சாடினார். பெரிக்காத்தானின் கூட்டணியில் இருக்கும் பெர்சத்துவை வீழ்த்த தந்திரமாகச் செயல்பட்ட பெர்சத்து முன்னாள் துணைத் தலைவரான DATUK SERI HAMZAH ZAINUDIN மீண்டும் பெரிக்காத்தானுக்குள் நுழைய விட கூடாது என பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்துள்ளார்.

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட DATUK SERI HAMZAH ZAINUDIN, WAWASAN எனும் Parti Cinta Malaysia (PCM) கட்சியில் இணைந்து அக்கட்சியைப் பெரிக்காத்தானின் கூட்டணிக் கட்சியாக இணைக்க விண்ணப்பம் செய்திருப்பது சட்ட ரீதியில் தவறானது என Datuk Seri Ahmad Faizal Azumu குறிப்பிட்டார். Parti Cinta Malaysia எனும் கட்சியை Parti Wawasan Negara என பெயரை மாற்றியதற்கு அரசு அங்கீகாரம் இதுவரையும் பெறப்படாத நிலையில் இது சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படாத கட்சி என Datuk Seri Ahmad Faizal Azumu மேற்கோள் காட்டினார். 

பெரிக்காத்தானில் ஏற்கனவே தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் உள்ளது. இதற்கிடையில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியைப் பெரிக்காத்தானில் அவசர அவசரமாகச் சேர்க்கும் பெரிக்காத்தான் தலைமை எதிராக Datuk Seri Ahmad Faizal Azumu கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *