ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலிட் – காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது ஜேடிதி
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
ஜொகூர் பாரு, மார்ச் 12-
ஜொகூர் டாருல் தக்சிம் (JDT) அணியின் தலைமைப் பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ், தனது அணியினர் ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலிட் (ACLE) போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறியதில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.
போட்டியின் கிழக்கு மண்டல 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியில் ஜப்பான் அணியான சான்ப்ரெச்சே ஹிரோஷிமாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் ஜேடிதி தோல்வியடைந்தாலும், முதல் கட்டப் போட்டியில் பெற்ற 3-1 வெற்றி காரணமாக “ஹரிமாவ் செலத்தான்” அணி மொத்த கணக்கில் 3-2 என முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஹிரோஷிமாவில் உள்ள எடியன் பீஸ் விங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி கடுமையான போட்டியாக இருந்தது. இருப்பினும் முதல் கட்டத்தில் பெற்ற வெற்றி ஜேடிதி அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.
இந்த சாதனை தன்னுடையதல்ல, முழு அணியின் கூட்டு முயற்சியின் பலன் என முனோஸ் தெரிவித்தார். குறிப்பாக ஜேடிதி அணியின் உரிமையாளர் துங்கு மஹ்கோட்டா இஸ்மாயிலும் அணியுடன் எப்போதும் இருந்து ஊக்கம் அளித்து வருவதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



