சென்னை இளைஞர் கொலை: முதலமைச்சர் சொல்லப்போகும் காரணம் என்ன? – டிடிவி தினகரன் கேள்வி
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
சென்னை, செப். 10 –
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக அரசையும் முதலமைச்சர் ஜோசப் விஜயையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்கில் கைது செய்யப்போவதாகவும் பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், மறுநாளே அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.
சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும் காவல்துறை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்மையில் பேசியிருந்ததை தினகரன் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய சூழலில், காவல் அதிகாரி ஒருவர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் மறுநாளே கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



