சீனப் பள்ளிகளில் அதிகமான மலாய் மாணவர்கள்
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 9-
கடந்த சில ஆண்டுகளாக மலேசிய கல்வி துறையின் வடிவமைப்பு கணிசமான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, மலாய் பெற்றோர்கள் அதிக அளவில் தங்கள் குழந்தைகளை சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். இது சாதாரண தேர்வாக இல்லாமல் மாறாக, பெற்றோரின் ஆழமான எதிர்பார்ப்புகளையும், பல பரிமாணங்களில் அமைந்த நீண்டநாள் கல்வி சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.
கல்வி அமைச்சின் (KPM) சமீபத்திய தரவுகளும் இதை ஆதரிக்கின்றன. 2014-ஆம் ஆண்டில் SJKC-யில் படித்த மலாய் மாணவர்கள் 11.67 விழுக்காடு மட்டுமே இருந்த நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 18.52 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளில் சீனப் பள்ளிகளில் பயிலும் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யூதிஎம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் முகமது சஹிடான் சைனால் அபிடின், குழந்தைகள் மான்டரின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நீண்டகால உத்தி, மலாய் பெற்றோருக்கு முக்கிய அம்சமாக உள்ளதாக கூறினார். மேலும் மலாய் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்று வளர வேண்டுமென பெற்றோர்கள் விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



