DAP அடிபணியக்கூடாது! - அன்வார்
- Shan Siva
- 24 Sep, 2026
கோலாலம்பூர், செப் 24: முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Loke Siew Fook) தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு அக்கட்சிக்கு அழுத்தம் கொடுப்பவர்களின் பேச்சுக்கு DAP அடிபணியக்கூடாது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் கேட்கிறார்கள், ஏன் லோக் மட்டும் வெளியேறுகிறார்? DAP-யைச் சேர்ந்த அனைவரும் ஏன் வெளியேறக்கூடாது? என்று.
இது யாருடைய யோசனை? அவர் ஏன் வெளியேற வேண்டும்? அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை அவர் முன்மொழியவில்லை; அதை எதிர்ப்பதற்கு அவர் தன்னால் இயன்றவரை முயன்றார்.
எனவே, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்களின் அழுத்தத்திற்கு DAP அடிபணியக்கூடாது என்று தாம் கருதுவதாகவும், அவர்கள் அரசாங்கத்தைச் சீர்குலைக்கவே விரும்புகிறார்கள் என்றும் அன்வார் கூறினார்.
இத்தகைய மோசமான தந்திரங்கள் மூலம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கான வழிகளை அவர்கள் தேடுகிறார்கள் என்று ஷாங்காயில் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



