4-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட நாம் தமிழர் கட்சி: வாக்கு சதவீதமும் சரிவு

top-news
FREE WEBSITE AD


தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 முடிவுகளில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தல்களில் தொடர்ந்து வாக்கு வங்கியை உயர்த்தி வந்த அந்தக் கட்சி, இம்முறை 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், வாக்கு சதவீதமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 8 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி, தற்போது சுமார் 4 சதவீத வாக்குகளுக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தலில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன், டெபாசிட் கூட இழந்ததாக கூறப்படுகிறது. இது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களிடையே நல்ல ஆதரவை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்குகள், இம்முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

2016ஆம் ஆண்டு 1.7 சதவீத வாக்குகளுடன் தொடங்கிய நாம் தமிழர் கட்சி, 2021ஆம் ஆண்டு 6.6 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஆனால் 2026 தேர்தலில் ஏற்பட்ட இந்த சரிவு, கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *