ஜொகூர், கெடா, பேராக் மாநிலங்களில் 10 மேக விதைப்பு நடவடிக்கைகள் – நாளை தொடக்கம்

top-news

கோலா நெருஸ், பிப். 10-

நாட்டில் நீர் வளத்தை வலுப்படுத்தும் நோக்கில், Agensi Pengurusan Bencana Negara (NADMA) நாளை முதல் ஜொகூர், கெடா மற்றும் பேராக் மாநிலங்களில் மொத்தம் 10 மேக விதைப்பு (cloud seeding) நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

துணை பிரதமர்  Ahmad Zahid Hamidi தெரிவித்ததாவது, இந்த மேக விதைப்பு நடவடிக்கைகள் ஜொகூரில் மூன்று இடங்களிலும், கெடாவில் மூன்று இடங்களிலும், பேராகில் ஒரு இடத்திலும் நடைபெறவுள்ளதாக கூறினார். நீர் தட்டுப்பாடு நிலவுகின்ற பகுதிகளில் மழைப்பொழிவை தூண்டி, அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்துவதே இதன் முக்கிய இலக்காகும்.

ஜொகூர் மாநிலத்தில் Upper Layang, Pulai மற்றும் Machap அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மேக விதைப்பு நடவடிக்கைகள் நாளையும் வியாழனன்றும் நடைபெறும். இதேபோல், கெடா மாநிலத்தில் Pedu, Muda மற்றும் Ahning அணைகளுக்காக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேராக் மாநிலத்தில் உள்ள Bukit Merah அணைக்கான மேக விதைப்பு நடவடிக்கையும் அதே நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *