பொதுமன்னிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் சம்மந்தமில்லை! இது அரசியல் நாடகம்!

- Sangeetha K Loganathan
- 15 Jan, 2025
ஜனவரி 15,
பேரரசரால் வழங்கப்படும் பொதுமன்னிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை என மூத்த வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla தெரிவித்தார். முன்னதாக அன்வாருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பும் இப்போது நஜீப்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டை குறைப்பும் வீட்டுக் காவலும் பேரரசராலும் மலாய் ஆட்சியாளர்களாலும் எடுக்கப்படும் முடிவாக அமைகிறது என அவர் விளக்கமளித்தார்.
நாட்டின் அரசாங்கம் பேரரசருக்கு மரியாதையளிக்கும் நிலையில் பேரரசரின் பொது மன்னிப்பில் தலையிடாது என்றும் 1957 க்கு முன்னமே மலாய் ஆட்சியாளர்களின் கூட்டமைப்பு பொதுமன்னிப்புகளை வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
பேரரசரின் பொது மன்னிப்பை அரசாங்கம் ஏற்கிறதோ இல்லையோ, அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் அனைத்து அரசியல் தலைவர்களும் அறிந்த ஒன்று என்பதால் பொது மன்னிப்பு குறித்து அரசியல் நாடகம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Mohamed Haniff Khatri Abdulla menjelaskan bahawa pengampunan diraja tiada kaitan dengan kerajaan. Keputusan ini diambil oleh Raja dan Majlis Raja-Raja Melayu tanpa campur tangan kerajaan, seperti kes Anwar dan Najib.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *