நஜீப் விடுதலையா? நான் பதவி விலகுவேன்! டி.ஏ.பி அமைச்சர் சவால்!
- THINAGAREN SANGGAREN
- 30 Jun, 2026
ஜூன் 30,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சிறையிலிருந்து விடுதலையானால் நான் பதவி விலகுவேன் என வீட்டுவசதி உள்ளாட்சித் துறை அமைச்சர் Nga Kor Ming சவால் விடுத்தார். சுமார் 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான SRC International , 1MDB போன்ற அரசு நிறுவனங்களில் நிதியை ஊழல் செய்த வழக்கிலிருந்து நஜீப் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அடுத்த நொடியே நான் அரசாங்கத்தில் வகிக்கும் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வேன் என டி.ஏ.பியின் உதவித் தலைவரான Nga Kor Ming அறிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்தும் டி.ஏ.பி விலகுவதற்குச் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும், தனிப்பட்ட முறையில் டி.ஏ.பியின் அமைச்சர் பொறுப்பிலிருந்து நான் விலகினாலும் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான அரசாங்கத்திற்கு டி.ஏ.பி ஆதரவு அளிக்கும் என்பதையும் Nga Kor Ming உறுதிப்படுத்தினார். ஆனால், ஊழல்வாதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதற்காக டி.ஏ.பி அமைதியாக இருக்காது என்றும் சட்டத்தின் மூலமாக மீண்டும் ஆதாரங்களைத் திரட்டி நஜீப்பிற்கு எதிராக வழக்குகளை டி.ஏ.பி மேற்கொள்ளும் என Nga Kor Ming தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



