நஜீப் விவகாரத்தில் மாமன்னரின் முடிவை ஏற்கிறோம்! பக்காத்தான் அறிவிப்பு!
- THINAGAREN SANGGAREN
- 11 Sep, 2026
செப்டம்பர் 11,
மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak விவகாரத்தில் எடுக்கும் எந்தவொரு முடிவையும் பக்காத்தான் கூட்டணியின் தலைமை முழுமையாக வரவேற்கும் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் குழு தலைவரும் சிலாங்கூர் மெந்திரி பெசாருமான Datuk Seri Amirudin Shari உறுதியளித்தார். அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki கூறுவது போல பக்காத்தான் மாமன்னரின் முடிவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாது என Datuk Seri Amirudin Shari தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜீப்பிற்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் டி.ஏ.பியின் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என வெளிவந்த செய்திகளையும் கட்சியினரின் நிலைப்பாட்டையும் பக்காத்தான் தலைமை மதிக்கிறது என்றாலும் நம் கையில் இருக்கும் பொறுப்புகளை நாம் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என Datuk Seri Amirudin Shari பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு வலியுறுத்தினார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஆட்சி அமைத்த பின்னர், பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக ஒரே நிலைப்பாட்டில் இருந்து, அரசாங்கத்தில் அவரவர் கடமைகளை நிறைவேற்றுவோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறோம் என்பதை Datuk Seri Amirudin Shari சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



