65 பொதுமன்னிப்புகளை வழங்கிய மாமன்னர்! நஜீப்பிற்குப் பொதுமன்னிப்பா?

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 11,

மாட்சிமை தங்கிய மாமன்னர் SULTAN IBRAHIM தலைமையில் இன்று நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் கூட்டமைப்பில் சிறையில் இருக்கும் 65 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் அனைத்துப் பொதுமன்னிப்புகளும் வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் சட்டத்துறை பொதுமன்னிப்பு வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்னர் 65 வெளிநாட்டினர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் DATUK SERI NAJIB TUN RAZAK தொடர்பான பொது மன்னிப்பு விவகாரம் குறித்து மேலும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும். நஜீப்பின் பொதுமன்னிப்புக் குறித்து அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் விவாதிக்கபடும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல், பணமோசடி, ஆகிய வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க நஜீபின் தரப்பினர் பொதுமன்னிப்பைக் கோரியிருந்த நிலையில் மன்னிப்பு வாரியம் அந்த கோரிக்கையைத் தள்ளுபடி செய்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *