நஜீப்பிற்குப் பொதுமன்னிப்பு இல்லை! சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது! அன்வார்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 18,

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு மாமன்னர் வழங்கியிருப்பது பொதுமன்னிப்புக் கிடையாது என்றும் அது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு மட்டுமே என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். ஊழல்வதிகளுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது என்பதில் பக்காத்தான் ஹராப்பான் உறுதியாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மன்னரின் பொதுமன்னிப்பு குறைக்காது என்றும் பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.

ஊழல் வழக்குகளைத் துணிந்து விசாரிக்கவும் அதனை வெளிப்படுத்தவும் மடானி அரசு தொடர்ந்து செயல்படும்.  அதேவேளையில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரங்களையும், மாமன்னரின் முடிவுகளையும் அரசாங்கம் தலை வணங்கும் என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார். அதே வேளையில் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருவர் தப்பிக்க முடியாது என்பதையும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார். மலேசிய அரசியலமைப்பு மாமன்னரின் அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாமன்னரின் முடிவுகள் அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்காகவே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *