நஜிப்பிற்குப் பொதுமன்னிப்பு வழங்கிய மாமன்னர்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 18,

முன்னாள் பிரதமர் DATUK SERI NAJIB RAZAK க்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டார். சிறையில் இருக்கும் நஜீப் இனி வரும் காலங்களில் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

நஜீப் 2028 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் அபராதமாக RM 50மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மன்னிப்பு வாரிய கூட்டத்தில் நஜீப்பின் பொதுமன்னிப்பு விவாகரம் விவாதத்திற்கு கொண்டு வரப்படாத நிலையில் இன்று காலை மாமன்னர் தலைமையில் பிரதமர் துறையின் கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO உட்பட மலாய் ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து இம்முடிவை எடுத்ததாக மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக உயர்நீதிமன்றம் SRC International ஊழல் வழக்கில் சொத்துக்குவிப்பு பண மோசடி ஆகிய குற்றத்திற்காக நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் RM 210 மில்லியன் அபராதமும் விடுத்தது. தற்போது மாமன்னர் தலைமையில் வழங்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்பு SRC INTERNATIONAL வழக்குக்கு மட்டுமே என்றாலும் 1MBD 2.3பில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  

1MDB பண மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப்பின் மீது 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் உயர்நீதிமன்றம் 1MDB பண மோசடியில் நஜீப் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் RM 11.68 பில்லியன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த ஜனவரி மாதம் நஜீப்பின் வழக்கறிஞர் குழு உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் நஜிப்பிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டாலும் நஜீப் மீதான 1MDB வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *