நஜீப்பின் செலவுகளை அரசு ஏற்காது! உள்துறை அமைச்சர் விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 12 Nov, 2026
நவம்பர் 12,
முன்னாள் பிரதமர் நஜீப்பின் வீட்டைப் பாதுகாப்புப் பணிகளுக்காக மாற்றியமைக்க அரசு நிதி பயன்படுத்தப்படாது என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். முன்னாள் பிரதமர் நஜீப்பின் செலவுகளுக்காக அரசு நிதி எந்த வகையிலும் பயன்படுத்தபடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். தற்போது வீட்டுக் காவலில் இருக்கும் நஜீப்பைக் கண்காணிக்க 3 சிறைச்சாலை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கூடுதல் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சிறைச்சாலையில் பணியாற்றியது போலவே நஜீப்பின் வீட்டிலும் பணியாற்றுவார்கள் என Datuk Seri Saifuddin Nasution Ismail விளக்கமளித்தார்.
மேலும் நஜீப்பின் வீட்டைப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் மறுசீரமைக்கிறது எனும்படியான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் வீட்டில் பாதுகாப்புக் குறைப்பாடுகள் இருந்தால் அது நஜீப்பின் சொந்த செலவிலேயே அவரே மறுசீரமைக்கட்டும் என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். நஜீப்பின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் தற்போது அவருக்கு அரசாங்கத்தின் எந்தவொரு சிறப்பு உதவித் திட்டம் இல்லை என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மாமன்னரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பொதுமன்னிப்பை அமல்படுத்துவது மட்டுமே உள்துறை அமைச்சின் பொறுப்பு. பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றவாளிக்கு ஏற்ப அவருடைய வீட்டைச் சுத்தம் செய்து மறுசீரமைப்பது அரசாங்கத்தின் வேலை இல்லை என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

