நஜீப்பின் விடுதலை! அரசாங்கத்திற்குப் பாதிப்பு இல்லை! அம்னோ தலைவர் உறுதி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 21,

முன்னாள் பிரதமர்  Datuk Seri Najib Tun Razak-க்கு வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுடனான பொதுமன்னிப்பிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதால் பாரிசான் பக்காத்தான் தலைமைகளுக்கு இடையில் விரிசல் ஏதுமில்லை என துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi உறுதியளித்தார். 

பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும் இடையிலான புரிதல் சுமூகமாகவே உள்ளது. நாங்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆட்சி, அதிகாரம், அரசாங்கம் எனும் நிர்வாகத்துவத்தில் முறையான புரிந்துணர்வுடனே செயல்படுகிறோம் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பாரிசான் தலைமையும் பக்காத்தான் தலைமையும் அரசாங்கத்தின் கண்ணியத்தைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம். நஜீப் தண்டனை குறைப்பு விவகாரத்தில் அம்னோ, பி.கே.ஆர், டி.ஏ.பி என கட்சிகளின் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எனும்போது மிகுந்த புரிந்துணர்வுடன் செயல்படுவதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *