நமச்சிவாய புஜங்கம்...
- Surendran Sumdraraj
- 25 Sep, 2026
பரமேஸ்வரனின் பேரருளைப் பெறவும், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி நிம்மதி அடையவும் ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம் "நமச்சிவாய புஜங்கம்".
பாம்பின் அசைவைப் போன்ற அழகான சந்த நயத்தில் (புஜங்கப்ரயாதம்), ஒவ்வொரு ஸ்லோகத்தின் இறுதியிலும் "நமச்சிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திர மகுடத்தோடு ஒளிரும் இந்த துதியின் வரிகளையும் அதன் ஆன்மீகப் பொருளையும் கீழே படித்து, இறைவனின் அருளைப் பெறுங்கள்!
சிவபுண்ணியத்தை அடைய இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பாடல் ௧: நமச் சப்த மகிமையும் அக மகிழ்ச்சியும்
மூல ஸ்லோகம்:
நமச்சப்தமாத்ரே ஸதாதுஷ்டதேவம் நதாநாம்முனீனாம் ஹ்ருதிஸ்தம்கிரீசம், நரேந்த்ராதிபத்யம் ததந்தமவஹந்தம் நமச்சிவாயேதி பதாபிதம்ஸ்துவே. (௧)
* நேரடிப் பொருள்: ‘நம’ என்றதும் சந்தோஷமடையும் தெய்வம், வணங்குகின்ற முனிவர்களின் உள்ளத்தில் இருந்து, உலகப் பேரரசைக் கொடுத்தும் வழிநடத்தியும் வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்துத் துதிக்கின்றேன்.
மெய்ப்பொருள்:
o மூல இலக்கு: ‘நம’ என்ற ஒலியின் அதிர்வால் எழும் இயல்பிருப்பு வலை அடக்கமும், அக மகிழ்ச்சியும்.
o மையச் செயல் சூத்திரம்: ‘நம’ என்னும் ஒலி அதிர்வு எழுந்த உடனே, புற உலகை நோக்கி அலைபாயும் தர்க்க அகந்தை வலைப்பின்னலை அடக்கி, உள்ளத்தில் சாந்தத்தையும் திருப்தியையும் உடனடியாக உருவாக்குகிறது.
o கபால வழித்தடம்: செவிப்புலப் புறணி --->உணர்வு வாயில் உட்கரு ---->முன்நெற்றிப் புறணி --->நடுமூளை ஊக்க நரம்பு மையம்.
o கட்டுப்பாட்டுப் பொறிமுறை: ‘ந’ மற்றும் ‘ம’ என்னும் அட்சர அதிர்வுகள் கபால அடித்தளத்திலிருந்து புறணிப் பகுதிக்கு உயர்ந்து, அச்சம், படபடப்பு மற்றும் மன அலைபாய்தலை நீக்கி அமைதி நரம்பு நீர்மங்களைச் சுரக்கச் செய்கின்றன.
o அக விழிப்புணர்வு நெறிமுறை:
‘நம’ என்பதை வெறும் உச்சரிப்புச் சொல்லாகக் கருதாமல், கபாலத்தின் இன்ப மையங்களை விழிப்படையச் செய்யும் ஒலி விசையாக உணர வேண்டும்.
பாடல் ௨: மஹாவாக்கிய வடிவம் மற்றும் ஏகத்துவ உணர்வு
மூல ஸ்லோகம்:
மஹாதேவமீசம் மஹாவாக்ய்கேஹம் மஹாத்மானமேகம் மஹத்தத்வமூர்த்திம் மஹாருத்ரயஜ்ஞை: ஸதாஸ்தூயமானம் நமச்சிவாயேதி பதாபிதம்ஹுவே. (௨)
* நேரடிப் பொருள்: மஹாதேவன், ஈசன், மஹாவாக்கியத்தையே உறைவிடமாகக் கொண்ட பரமாத்மா, ஒரே மெய்ப்பொருள், மஹத் தத்துவ வடிவான மூர்த்தி, மஹாருத்திர யாகங்களினால் எப்போதும் துதிக்கப்படுபவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன்.
மெய்ப்பொருள்:
o மூல இலக்கு: மஹாவாக்கியத்தின் அக உறைவிடமும் கபால அத்வைத அனுபவமும்.
o மையச் செயல் சூத்திரம்: ‘நமச்சிவாய’ என்பது ஜீவ விழிப்புணர்வையும் பிரம்மப் பெருவெளியையும் இணைக்கும் மஹாவாக்கிய ஒளிப் பாலமாகும்.
o கபால வழித்தடம்: பேச்சு மொழிப் புறணி மையம் ----> உணர்வு வாயில் உட்கரு --->கூம்புச் சுரப்பி ----> உச்சிக்கபால மையம்.
கட்டுப்பாட்டுப் பொறிமுறை: ஒவ்வொரு உச்சரிப்பும் பேச்சு மையத்திலிருந்து உச்சிக்கபாலம் வரை அதிர்வைச் செலுத்தி, நான்-பிரம்மம் என்ற இரண்டற்ற பூரண ஒருமைப்பாட்டை உண்டாக்குகிறது.
o அக விழிப்புணர்வு நெறிமுறை: மஹாவாக்கியம் என்பது புற மொழிக் கருத்து அல்ல; அது கபாலக் குகைக்குள் எழும் ஆதி ஞான ஒளியாகும்.
பாடல் ௩: சாந்த சொரூப அக ஒளியும் புலன் அடக்கமும்
மூல ஸ்லோகம்:
சிவம்சாந்தமூர்த்திம் சிஷ்டைகபூஜிதம் ச்ரிதாங்க்ரிஸ்வபக்தான் ஸதைவாபிரக்ஷம் ச்ரியம்ஸந்ததானம் சிலாரூபமாத்யம் நமச்சிவாயேதி பதாபிதம்நமே. (௩)
* நேரடிப் பொருள்: சிவன், அமைதியான வடிவானவர், சான்றோர்களால் பூஜிக்கப்படுபவர், சரணடைந்த பக்தர்களை எப்போதும் காப்பவர், ஆன்மச் செல்வத்தை அருள்பவர், திருமேனியாகத் தோன்றினாலும் ஆதியும் அந்தமும் இல்லாதவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்று வணங்குகிறேன்.
•
மெய்ப்பொருள்:
o மூல இலக்கு: சாந்த சொரூபப் புறணி ஒளியும் உள்முக வழிபாடும்.
o மையச் செயல் சூத்திரம்: சிவம் என்பது அமைதியான சாட்சிப் பேரொளி; சிஷ்டர்கள் என்பது புலன் உணர்வு வாயில்களை வென்ற விழிப்புணர்வு நிலைகள்; அவர்கள் உள்ளத்தில் இவ்வொளியை வழிபடுகின்றனர்.
o கபால வழித்தடம்: முன்நெற்றிப் புறணி --> உணர்வு வடிகட்டி உட்கரு --> கூம்புச் சுரப்பி.
o கட்டுப்பாட்டுப் பொறிமுறை: புறப் புலன் வாயில்கள் ஒடுங்கிய சாந்த நிலையில், அகத்தே சுடரும் சுயம்பிரகாச ஒளியை நிலைநிறுத்துவதே சிவபூஜையாகும்.
o அக விழிப்புணர்வு நெறிமுறை: சிவனை வெளிப்புறச் சிலையாக மட்டும் கருதாமல், கபாலத்தின் உள் சுடரும் சாந்த விழிப்புணர்வாக உணர வேண்டும்.
பாடல் ௪: ‘வ’ கார அமுத பீஜமும் கபால நீர்மப் பெருக்கும்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



