UPM பெயர் மாற்றப்படாது! - சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்

- Shan Siva
- 30 Nov, 2024
சிலாங்கூர்
சுல்தான், சுல்தான்
ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, யுனிவர்சிட்டி
புத்ரா மலேசியா எந்தவித பெயர் மாற்றமும்
காணாது என்று தெரிவித்துள்ளார்.
யுபிஎம்
அறங்காவலர் குழு மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில்
பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது குறித்து முன்கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை
என்று அவர் கூறினார்.
UPM என்ற பெயர் முதல்
பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜின் நினைவாகவும் உள்ளது என்று சுல்தான்
தெரிவித்தார்.
வரலாற்றைப்
புரிந்து கொள்ளாதவர்கள், குறிப்பாக UPM
தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடுவதற்கு
முன்பு வரலாற்று உண்மைகளைப் படித்து ஆய்வு செய்யுமாறு தாம் நினைவூட்ட விரும்புவதாக
அவர் கூறினார்.
கடந்த வியாழனன்று, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு,
UPM இன் பெயரை அதன் அசல்
பெயரான Universiti Pertanian Malaysia என மாற்றுவதற்கான திட்டம் அமைச்சரவையில் விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படும்
என்று கூறியதை அடுத்து சுல்தான் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாட்டில்
விவசாயத் துறையை, குறிப்பாக இளைய
தலைமுறையினரிடையே மீண்டும் பிரபலப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய, விவசாயத் துறையில் உள்ள மற்ற தொழில்
நிறுவனங்களுடன் UPM ஒத்துழைக்க
வேண்டும் என்று சுல்தான் ஷராஃபுதீன் பரிந்துரைத்தார்.
விவசாயத்துறைக்கு
ஆற்றல் மற்றும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை சமூகம் நம்ப வேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *