இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் வெற்றி பெறுவோம் - தேசிய ஆடவர் ஹாக்கி அணி நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6-
 மே 21 முதல் 25 வரை கஜகஸ்தானின் தால்டிகோர்கனில் நடக்கும் ஆசிய இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேசிய ஆடவர் ஹாக்கி அணி உள்ளது.
பல அனுபவமிக்க வீரர்களும் புதிய முகங்களும் அணியில் உள்ளதால், வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தின் பேங்காக்கில் செய்த சாதனையை மீண்டும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஆடவர் ஹாக்கி அணியின் தலைவர் நஜ்மி ஃபரிசல் ஜஸ்லான் கூறினார்.
இந்த வாரம் தாய்லாந்தில் நடைபெறும் நட்புரீதியான போட்டியும் அணிக்கு மிகவும் முக்கியமானது. தேசிய அணி சரியான பாதையில் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதோடு இந்த நட்பு ரீதியான ஆட்டம் தேசிய அணியின் நிலையைப் பிரதிபலிக்கும் என்றார்.
மேலும்,  ஈரான், கஜகஸ்தான் போன்ற வலுவான அணிகளைச் சந்திக்க வேகமான ஆட்டம் தேவை என்பதால், விரைவில் தேசிய அணியின்  பாணியையும் போட்டியின் தீவிரத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டு குரோஷியாவில் நடக்கவிருக்கும் உள்ளரங்க ஹாக்கி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இடம் பெற, ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *