2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மதுபானம் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு!

top-news

ஈப்போ, அக் 26 :

அரச மலேசிய  சுங்கத் துறையின் பேராக் கிளை இந்த மாதம் மூன்று வெவ்வேறு இடங்களில், 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மதுபானத்தை மலேசியாவிற்கு கடத்த முயன்ற முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.பெங்கலன் உலு நிலையத்திலிருந்த அமலாக்கப் பிரிவு அக்டோபர் 14 அன்று மாலை 4.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் உள்ள ஒரு வளாகத்தில் சோதனை நடத்தியது.

இதில் இறக்குமதி வரிகள் உட்பட மதிப்பிடப்பட்ட RM557,346 மதிப்பிலான பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்களின் 6,100 லிட்டர்களை நாங்கள் கைப்பற்றியதாக இயக்குனர் டத்தோ அப்துல் கபார் முகமட் தெரிவித்தார். மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக 58 வயதான உள்ளூர் நபரை தடுத்து வைத்துள்ளதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஈப்போவில் உள்ள தனித்தனி வளாகங்களில் மேலும் இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன, இதன் விளைவாக 26,756 லிட்டர் பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, இதன் மதிப்பு RM2.25 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
43 மற்றும் 64 வயதுடைய இரண்டு ஆண்களும் இந்த சோதனைகளில் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்