நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
சென்னை, ஜூன் 16 –
நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு, அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பின்போது நினைவுப் பரிசு வழங்கப்பட்டதுடன், இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவிலும், இந்தியத் திரையுலகில் ரஜினிகாந்த் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய அரை நூற்றாண்டு கால கலைப்பயணம் மேலும் தொடர வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



