அதிகரிக்கும் சிறுநீரக நோய்! சுகாதாரத்துறை அச்சம்
- Shan Siva
- 12 Apr, 2026
ஷா ஆலம், ஏப் 12: இறுதி நிலை சிறுநீரக நோய்க்கான சிகிச்சைக்கு மலேசியா தற்போது ஆண்டுக்கு RM3.3 பில்லியன் செலவிடுகிறது.
இது 2010-ல் RM572 மில்லியனாக இருந்த நிலையில் இருந்து கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் சுகாதார அமைப்பின் மீது நாள்பட்ட நோய்களால் ஏற்படும் சுமை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அஹ்மத் கூழ்ரினார். நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) இன்று மலேசியர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று கூறினார்.
நாட்டில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே இது குறித்து அறிந்திருக்கிறார்கள்.
நாள்பட்ட சிறுநீரக நோயின் (CKD) பரவல் விகிதமும் 2011-ல் ஒன்பது சதவீதத்திலிருந்து 2025-ல் 15.5 சதவீதமாக கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும், 28 மலேசியர்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று அவர் ஷா ஆலமில் நடைபெற்ற தேசிய அளவிலான உலக சிறுநீரக தினம் 2026 நிகழ்வில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



