இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள்-ஓம்ஸ் பா.தியாகராஜன் தீபாவளி வாழ்த்து செய்தி!

top-news

இன்பத் திருநாளாம் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பகைமையை வேரறுத்து ஈகையை ஈந்தளிக்கும் திருநாளாக தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் தமிழ் மலர் குழுமத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய இந்திய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் மறைந்து இன்பம் மலரும் தனித்துவமிக்க பெருநாளாக தீபாவளி இருப்பதால் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருந்து எதிர்காலத் தலைமுறையினர் நல்வழியில் செல்ல ஒன்றாய் பாடுபடுவோம்.

பிந்திய சமுதாயம் எனும் நிலையை மாற்றி முந்திய சமுதாயமாக இந்திய சமுதாயம் மறுமலர்ச்சி காணவேண்டும்.இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தின் வரலாறு என்பது பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுக் காவியமாகும். முன்னோர்களின் பங்களிப்பு இன்று நமக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறந்து விட முடியாது. எதிர்கால இந்திய சமுதாயம் எல்லாத் துறைகளிலும் வெற்றிநடைபோட நாம் உறுதி கொள்வோம்.

திசையெங்கும் நம் சுவடுகள் படர வேண்டும். நம் எண்ணங்கள் என்றென்றும் நிறைவேறும் எண்ணங்களாக இருக்க தீபத் திருநாள் நம் வாழ்வில் ஒளிவீசட்டும். இவ்வாறு ஓம்ஸ் தியாகராஜன் தம் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்