அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா!

- Muthu Kumar
- 09 May, 2025
இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் இந்திய எல்லையை கூட தாண்ட முடியாமல் பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன.இதற்குப் பின்னணியில் இஸ்ரேல் வழங்கிய ரிமோட் மானிட்டரிங் டெக்னாலஜி உதவி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழித்தொழிக்க, இந்திய பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பதிலடி தாக்குதலை நடத்தியது.
இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.
உளவுத்துறை தகவல்கள் படி, இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் மூலம் பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவற்றின் அடிப்படை தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் நடவடிக்கை முழுக்க முழுக்க தீவிரவாத முகாம்களை குறிவித்து நடத்தப்பட்டது என இந்தியா கூறி இருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை நேரங்களில் பாகிஸ்தான் அத்திமீறி இந்திய பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில் இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழித்தது. பதிலுக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிநவீன ட்ரோன்கள் மூலம் இந்தியா அழித்து ஒழித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் பல்வேறு முறைகளில் உதவி இருப்பது தெரியவந்துள்ளது.
ஆர்எம்டி (RMT) மற்றும் உளவுத்துறை தகவல் மூலம் உயர்தர பாதுகாப்பு சாதனங்களை இஸ்ரேல் வழங்கி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே இஸ்ரேல், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு சிறந்த கூட்டாளியாக விளங்கி வருகிறது. அந்த வகையில் உளவுத்துறை ஆதரவு, பயிற்சி மற்றும் தற்காப்பு தீவிரவாத நடவடிக்கை ஆகியவற்றில் இஸ்ரேல் உதவி இருக்கிறது. குறிப்பாக ட்ரோன் டெக்னாலஜி, ரிமோட் மானிட்டரின் டெக்னாலஜி போன்ற தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கியதில் இஸ்ரேலின் பங்கு அதிகம் என்கின்றனர் பாதுகாப்புத்துறை நிபுணர்கள்.
ஏற்கனவே இஸ்ரேல் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்நாட்டு அனுபவங்களை இந்தியாவுடன் பகிர்ந்து பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கி உதவிய நிலையில், மிகச் சரியான உளவுத்துறை டெக்னாலஜிகள் மற்றும் உயர் பாதுகாப்பு சாதனங்களை வழங்கி உதவியது இஸ்ரேல் தான் என்றும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என தெரிந்திருந்தாலும், அதனை துல்லியமான நேரத்தில் கண்டுபிடித்து எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேலின் ஆர்எம்டி டெக்னாலஜி உதவியது என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *