புலிக்குப் பலியான பூர்வக்குடி ஆடவர்! சுங்கை சிப்புட்டில் சோகம்
- Shan Siva
- 22 Sep, 2026
கோலாலம்பூர். செப்
22: பேராக் மாநிலம், சுங்கை சிப்புட்
வடக்குப் பகுதியில் உள்ள போஸ் பெர்வோர், கம்போங் டாகுங் (Kampung Takung) என்ற இடத்தில், பூர்வக்குடி இனத்தைச்
சேர்ந்த நபர் புலியால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததையடுத்து,
பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள்
துறை (Perhilitan) தனது பணியாளர்களை
அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
சம்பவத்தின்
உண்மையான சூழலைத் தீர்மானிக்க, தேடுதல் வேட்டையை
மேற்கொள்ளுதல், ஆரம்பகட்ட
தகவல்களைச் சேகரித்தல், சம்பவ இடத்தைப்
பார்வையிடுதல் மற்றும் விசாரணைகளை நடத்துதல் ஆகிய பணிகளை அக்குழு மேற்கொள்ளும்
என்று அத்துறை தெரிவித்தது.
இந்தத் தேடுதல்
நடவடிக்கையில் காவல்துறை, மக்கள்
தன்னார்வலர் படை (Rela), சிவில்
பாதுகாப்புப் படை (CDF) மற்றும் உள்ளூர்
மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன்
தொடர்புடையதாகக் கருதப்படும் அந்த இடத்தில் போராட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக
அத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று சுங்கை சிப்புட்,
போஸ் பெர்வோர், கம்போங் டாகுங் அருகே உள்ள கோர்பு (Korbu) வனப்பகுதியில் நண்பருடன் பிரம்பு சேகரிக்கச்
சென்றபோது, புலியால்
தாக்கப்பட்டதாகக் கருதப்படும் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த
ஜம்பேரி அங்காஹ் (Zamberi Angah) என்பவர்
உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அருகிலுள்ள
பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாகத் தனியாக, புலி நடமாட்டம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட காடுகள் அல்லது
பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



